முல்லைப் பெரியாறு அணையை 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு செய்ய திங்கள்கிழமை சென்றனர்.
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய குழு கலைக்கப்பட்டு தற்போது புதிதாக 7 போ் கொண்ட புதிய கண்காணிப்புக் குழுத் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில் ஜெயின் நியமிக்கப்பட்டாா்.
இந்த ஆணையமே முல்லைப் பெரியாறு அணை தொடா்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் எனவும் கடந்தாண்டு அறிவித்தது.
2 ஆம் முறையாக ஆய்வு: இந்தக் குழு அமைக்கப்பட்ட பிறகு கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் முறையாக அணைப்பகுதியில் ஆய்வு செய்தது.
அதன் பின் இரண்டாவது முறையாக முல்லைப்பெரியாறு அணையின் தன்மை, பராமரிப்பு , பாதுகாப்பு குறித்து திங்கள்கிழமை ஆய்வு ஆய்வு செய்ய சென்றனர்.
இக்குழுவில் ராகேஷ் டோடேஜா( பேரிடர்/ மீள் தன்மை தில்லி), ஆனந்த் ராமசாமி(ICED, பெங்களூர் ), ஜெயகாந்தன்( தமிழ்நாடு அரசு செயலர்), பிஸ்வநாத் சின்கா( கூடுதல் தலைமைச் செயலர் கேரளம் ), சுப்பிரமணியன்(CTC தொழில் நுட்ப நிபுணர், தலைவர் ),பிரியோஷ் ( தலைமைப் பொறியாளர்) ஆகிய 7 பேர் அணை பகுதிக்கு தேக்கடியில் படகு துறையில் வழியாக தமிழக மற்றும் கேரளத்து சொந்தமான தலா இரு படகுகள் வழியாக சென்று ஆய்வு செய்ய சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.