செயல்படாத பழைய வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தைக் கண்டறியவும் அவற்றைப் பெறவும் இந்திய ரிசர்வ் வங்கி புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி நீங்கள் மறந்துவிட்ட அல்லது உரிமை கோரப்படாத நிலையில் உள்ள வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை நீங்கள் பெற முடியும்.
உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தினரின் வங்கிக்கணக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அல்லது அதற்கு மேலும் செயல்படாமல் இருந்து அவற்றில் தொகை இருந்தால் அதனைக் கண்டறிந்து பெற முடியும்.
வங்கியில் செயல்படாத கணக்குகளில் (2 ஆண்டுகளுக்கும் மேலாக, 10 ஆண்டுகள் வரை) மற்றும் பணம் கோரப்படாத டெபாசிட்கள் (10 ஆண்டுகளுக்கு மேல்) உள்ள தொகை ஆர்பிஐ-யின் டிஇஏ- நிதிக்கு மாற்றப்படும் நிலையில் அதனை நீங்களோ அல்லது உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகளோ எந்த நேரத்திலும் அதைக் கோரிப் பெறலாம்.
இந்நிலையில் உரிமை கோரப்படாத இந்த தொகையைப் பெற நீங்கள் https://udgam.rbi.org.in என்ற இணையதளத்திற்குச் சென்று வங்கிள் கணக்காளரின் பெயர் மட்டும் மொபைல் எண்ணை பதிவிட்டு தேடலாம். இதில் 30 வங்கிகள் உள்ளன.
அல்லாமல் நீங்கள் வங்கிக் கிளையையும் தொடர்புகொள்ளலாம்.
ஆன்லைனிலோ அல்லது நேரிலோ உங்களுடைய கேஒய்சி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் (ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அல்லது ஓட்டுநர் உரிமம்).
உங்களுடைய விவரங்கள் பொருந்தினால் அந்த பணத்தை நீங்கள் வட்டியுடன் பெறலாம். இது அனைத்து நேரங்களிலும் செயலில் உள்ள நிலையில் இந்த தொகையை மக்கள் எளிதாகப் பெற தற்போது வங்கிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரை நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலமாக உரிமை கோரப்படாத வங்கியில் உள்ள பணத்தை உரிய ஆவணங்களை வழங்கிப் பெறலாம் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.