தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,760 உயர்வு!
இன்றைய தங்கம் விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,760 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை கடந்த அக்.27-ஆம் தேதி சவரன் ரூ.91,600-க்கு விற்பனையானது. தொடர்ந்து, அக்.28-இல் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,000 குறைந்து ரூ.88,600-க்கு விற்பனையானது.
அதன்பின்னர், தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், சவரன் ரூ.91 ஆயிரத்துக்கு மிகாமல் விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்நிலையில், திங்கள்கிழமை காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,410-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.91,280-க்கும் விற்பனையானது. தொடர்ந்து மாலை தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்து ஒரு கிராம் ரூ.11,480-க்கும், ஒரு சவரன் ரூ.91,840-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,760 உயர்ந்து ரூ. 93,600-க்கும் கிராமுக்கு ரூ. 220 உயர்ந்து ரூ. 11,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.170-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
The price of gold jewellery in Chennai has risen sharply by Rs. 1,760 per sovereign.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.