சென்னையில் ஒரே முகவரியில் இருப்பதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்த்தல் காலனியில் 200 முதல் 250 குடியிருப்புகளில் 26,000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களில் பெரும்பாலானோரின் வாக்காளர்அடையாள அட்டைகளில் ஒரே கதவு எண் மட்டுமே இருப்பதால், அப்பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாக்கம் காலனிக்கு குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, அவர்களுக்கு ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டாலும், அவர்களில் பெரும்பாலானோரின் முகவரிகள் முழுமைப்படுத்தாமலே உள்ளன.
26,000 குடும்பங்களில் சுமார் 3,000 குடும்பங்கள் மட்டுமே முழுமையான முகவரிகளைக் கொண்டுள்ளன. கதவு எண் 1 -இன்கீழ் 177 பேரும், கதவு எண் 29 -இன்கீழ் 16 பேரும் இருப்பதாகவும் பதிவாகியுள்ளது. இதுபோன்ற சிக்கல்களால் பெரும்பாக்கத்தில் பெரும்பாலானோர் வாக்குரிமையை இழக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: எஸ்ஐஆரின் கீழ் 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் 95% மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.