எஸ்ஐஆர் பணிகளில் திமுகவின் முறைகேடுகளைக் கண்டித்து சென்னையில் வரும் 17ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடைசியாக தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இப்போது தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிக்காக தேர்தல் ஆணையத்தால் பிரத்யேக கணக்கீட்டுப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை வாக்குச்சாவடி அலுவலர்கள் கடந்த நவ.4ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்ஐஆர் பணிகளில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து சென்னையில் வரும் 17ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதில், எஸ்ஐஆர் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருகிறது என்றும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை ராஜரத்தினம் திடல் அருகில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.