தவெக தலைவா் விஜய் கோப்புப் படம்
தமிழ்நாடு

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டோம் என்று தவெக திட்டவட்டம்

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருபோதும் தவெக இணையாது என்று கட்சி செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையுமா? என்ற கேள்விக்கு, ஒருபோதும் இல்லை என்று தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், எங்களின் கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம், அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களின் கொள்கை எதிரியாக பாஜகவை கூறினோம். அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிற எந்தக் கட்சியோடும் கூட்டணி வைக்க ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லை.

எங்கள் நிலைப்பாட்டில் எங்கள் தலைவர் விஜய்தான் முதல்வர் வேட்பாளர். எங்கள் கட்சியின் தலைமையை ஏற்று யார் வருகிறார்களோ, அவர்களுடன் எங்களுக்கு கொள்கை முரண்கள் இல்லையென்றால், அவர்களுடன் கூட்டணி வைப்போம். இதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: பிகார் தேர்தலில் உலக வங்கியின் ரூ. 14,000 கோடி: புள்ளிவிவரங்களுடன் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!

Never an alliance with NDA: TVK Joint Secretary NirmalKuar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ராகுல்காந்தியுடன் தவெக கூட்டணி பேச்சு?” கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் பதில்

டேரில் மிட்செல் சதம் விளாசல்; ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

என் சுவாசக் காற்றே... ஈஷா ரெப்பா!

வியத்நாமில்... பிரியா பிரகாஷ் வாரியர்!

#DINAMANI | SIR-ஐ எதிர்த்து தவெகவினர் மாநிலம் முழுவதும் போராட்டம்! | TVKa

SCROLL FOR NEXT