தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 57 ரயில்கள் தற்காலிகமாக மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபலமான மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில் இருமுடி மற்றும் தைப்பூசம் நிகழ்வையொட்டி அந்த வழியாகச் செல்லும் ரயில்கள் மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை பக்தர்களின் வசதிக்காக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் 57 ரயில்களின் விவரங்களை ரயில்வே வெளியிட்டுள்ளது.
லோகமான்ய திலக் - காரைக்குடி எக்ஸ்பிரஸ், சென்னை - மதுரை இடையே செல்லும் வைகை மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - ஹஸ்ரத் இடையே திருக்குறள் எக்ஸ்பிரஸ், சென்னை - செங்கோட்டை இடையே செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை - திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், சென்னை - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ், சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ், தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை -மன்னார்குடி எக்ஸ்பிரஸ், சென்னை - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ், தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வங்கதேச வன்முறை: ஷேக் ஹசீனா குற்றவாளி எனத் தீர்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.