தமிழ்நாட்டில் இதுவரை 6.07 கோடி பேருக்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கான (எஸ்.ஐ.ஆர்.) விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது 94.74% என்றும், இதுவரை 83 லட்சத்து 45 ஆயிரத்து 574 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பிகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம், கொல்கத்தா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 4ஆம் தேதி தொடங்கிய இப்பணிகள் டிச. 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனிடையே தற்போது வரை 6,07,41,484 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது 94.74 சதவீதமாகும்.
இவற்றில் 83 லட்சத்து 45 ஆயிரத்து 574 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 13.02 சதவீதம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இப்பணியில் 68,467 வாக்குச்சாவாடி நிலை அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | 2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு: 28 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.