ஷாலினி. 
தமிழ்நாடு

ராமேசுவரம்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் கைது!

காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ராமேசுவரத்தின் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் காவல் துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள சேராங்கோட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன். இவரது மகள் ஷாலினி (17) பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று(நவ.19) காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் முனிராஜ் என்பவர், பள்ளி மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை மாணவி ஷாலினி ஏற்காத நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவியை முனியராஜ் குடி போதையில் வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை ராமேசுவரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில், மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் முனியராஜை கைது செய்தனர்.

A drunken youth who stabbed a schoolgirl to death for refusing to fall in love with him has been arrested in Rameswaram!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி குண்டுவெடிப்பு! உமர் பேசிய விடியோ கிடைத்தது எப்படி? அதிர்ச்சித் தகவல்

ஷாய் ஹோப் சதம்: 34 ஓவர்களில் நியூசிலாந்துக்கு 248 ரன்கள் இலக்கு!

மோசமான வானிலை: திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்ட சர்வதேச விமானங்கள்!

முதல் வங்கதேச வீரராக வரலாறு படைத்த முஷ்ஃபிகுர் ரஹீம்!

கோவை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்!

SCROLL FOR NEXT