அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
தமிழ்நாடு

தவறான அணுகுமுறையால் கோவை மெட்ரோ பணியில் தாமதம்: இபிஎஸ்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தவறான அணுகுமுறையால் கோவை மெட்ரோ பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் பேசுகையில், “மேக்கேதாட்டு அணை பிரச்னையில் கடந்த 18 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் சிவக்குமார் மேக்கேதாட்டு அணை விரைவில் கட்டி முடிக்கப்படும் என அறிவித்திருக்கிறார். இதற்காக நீர்வளத் துறையின் ஆணையை விரைவில் பெறுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் மெத்தனபோக்கோடு இருக்கிறது. மேக்கேதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு முன்வந்தால் தமிழகம் பாலைவனம் ஆகும் நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மத்திய அரசின் நீர்வளத் துறையிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்து இந்தியா கூட்டணியில் அங்கம் வைக்கும் திமுக தங்களது கூட்டணிக் கட்சி தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு இதுபோன்று செயல்படுவது கண்டிக்கத்தக்கது” என்றும் அவர் தெரிவித்தார்

”கோவையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது சம்பந்தமாக மத்திய அரசு தமிழக அரசின் அறிக்கை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

நகர்ப் பகுதிகளில் மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும் என்றால் 20 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும் என்பது அரசின் விதி, கடந்த அதிமுக ஆட்சியின் போது 2011 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது 15 லட்சம் மக்கள்தான் இருந்தார்கள்.

தற்போதைய சூழலில், 2025 ஆம் ஆண்டைக் கணக்கில் கொண்டு, தற்போது உள்ள மக்கள் தொகையைக் கணக்கெடுத்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசின் தவறான அணுகுமுறையால் இந்த பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முறையாக தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Interview with Opposition Leader Edappadi Palaniswami.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 15 பேர் பலி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு!

பிகார் தேர்தல்: 24,000 தபால் வாக்குகள் நிராகரிப்பு

லவ் தீம்... நிஹாரிகா ரய்ஸாதா!

துபை விமான காட்சியில் எரிந்து விழுந்த இந்திய தேஜஸ் விமானம்!

SCROLL FOR NEXT