வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறைக்காக, நாளை(நவ. 24) முதல் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு செய்யவுள்ளனர்.
இது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த பி. பவன், துணை இயக்குநர் மற்றும் தேவன்ஷ் திவாரி ஆகியோர் நவம்பர் 24 முதல் 26, 2025 வரை சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கட்டம்-II குறித்த ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்வார்கள்.
அதைத் தொடர்ந்து, அவர்கள் கள அளவிலான ஆய்வுகளை மேற்கொள்வார்கள். கூடுதலாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ண குமார் திவாரி, இச்சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மற்றும் அதன் டிஜிட்டல் முறை உள்ளீடு குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகை தருவார்.
இதேபோல், மதுசூதன் குப்தா, செயலர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ஆய்வு செய்வார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.