தவெக தலைவர் விஜய் பேச்சு 
தமிழ்நாடு

2026ல் தவெக ஆட்சி உறுதி; தேர்தல் வாக்குறுதிகள் என்ன? - விஜய் பேச்சு

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பேச்சு...

இணையதளச் செய்திப் பிரிவு

2026ல் தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைவது உறுதி என காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

கூட்டத்தில் பேசிய விஜய்,

"மக்களின் பிரச்னைகளைப் பேசும்போது தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு தவெக மீது ஒரு ஆத்திரம் வரத்தானே செய்யும். அனைத்து மேடைகளிலும் தவெக பற்றி அவதூறு பேசுகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்வோம்.

கரூர் பற்றி நான் பேசுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். நான் கண்டிப்பாக பேசுவேன்.

தமிழ்நாட்டில் மக்களுக்கான ஆட்சியை மக்கள் வரவைப்பார்கள். 2026ல் தவெக ஆட்சி அமையும். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் விரிவாக இடம்பெறும். அதில் சிலவற்றை இங்கு சொல்ல விரும்புகிறேன்.

எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு வழியை ஏற்படுத்த வேண்டும்.

வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு டிகிரியாவது படித்திருக்க வேண்டும். வீட்டில் குறைந்தபட்சம் ஒருவருக்கு வருமானம் இருக்க வேண்டும். அதற்கான வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.

கல்வியில் பாடத்திட்ட சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் பயமின்றிச் செல்ல வேண்டும்.

பருவ மழைக் காலங்களில் மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

மீனவர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்களின் ஆலோசனையுடன் ஒரு வளர்ச்சி திட்டம்.

தொழிற்சாலைகளை மேம்படுத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கு கடுமையான விதிகளுடன் சரியாக இருக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் எப்படி செயல்படுத்துவோம் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறுவோம்.

நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே.

சொன்னால் அதைச் செய்யாமல் விடமாட்டேன். குறிவைத்தால் தவற விடமாட்டேன்.

மீண்டும் சொல்கிறேன் வரும் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி. வெற்றி நிச்சயம்" என்று பேசினார்.

TVK will form govt in Tamil Nadu in 2026: vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் வெளுத்து வாங்கும் கனமழை! மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

பொன்னிற வேளை... பாவனா!

ஸ்பிரிட் பட பூஜையில் சிரஞ்சீவி..! பிரபாஸ் பங்கேற்காதது ஏன்?

விமான டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தாலும் பணம் திரும்பக் கிடைக்கும்! விரைவில்

சன்டே மோட்டிவேஷன்... நந்திதா ஸ்வேதா!

SCROLL FOR NEXT