தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணையப் போவதாகத் தகவல் தெரிய வந்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணையவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வரும்நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்களும் இதனை உறுதிப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து செங்கோட்டையன் ஆதரவாளர் கூறுகையில், ``பழனிசாமியை எதிர்கொள்ள எங்கள் தலைவர் தவெகவில் இணைந்தால், நாங்கள் அதனை வரவேற்கிறோம். எங்கள் தலைவர் அமைதியாக இருந்தபோதிலும், அவரை அவர்கள் புறக்கணித்தனர்.
எம்ஜிஆருக்குப் பிறகு கூட்டங்களில் கலந்துகொள்ள பணம் கொடுக்காமல் ஒரு பெரிய கூட்டத்தை ஈர்க்கக்கூடிய ஒரே நபர் விஜய் மட்டுமே. எனவே எங்கள் தலைவர் தவெகவில் இணைந்தால் அது தவறல்ல’’ என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜிநாமா செய்யவிருப்பதாகவும், தவெக தலைவர் விஜய்யை நாளை (நவ. 25) சந்திக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவில் செங்கோட்டையன் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பாஜகவின் ஊதுகுழலாக இருக்கிறார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.