இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல், வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிடும் டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்திரன், இலங்கை அருகே உருவாகவுள்ள புதிய புயல் குறித்து தெரிவித்திருப்பதாவது:
”மலாக்கா ஜலசந்தியில் உருவாகியது சென்யார் புயல், வடக்கு சுமத்ராவில் இன்றே கரையைக் கடந்து நாளை படிப்படியாக வலுவிழக்கும். அந்தமான் கடல் பகுதி நோக்கியோ, தென்கிழக்கு வங்ககடல் நோக்கியோ நகர வாய்ப்பு இல்லை.
தமிழகத்திற்கு அப்பால் 2600 கி.மீ. தொலைவில் உருவாகியுள்ள சென்யார் புயலால் தமிழகத்திற்கோ/இந்தியாவிற்கோ எந்த தாக்கமும், பாதிப்பும் இருக்காது.
இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல் வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்
இலங்கை, குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் (நவம் 28ம் தேதி இரவு) புயலாகவும் வலுபெறக்கூடும்.
இந்தப் புயல் சின்னம் இலங்கை வழியே நகர்ந்து, நவம் 29/ 30 தேதிகளில் வடதமிழக கடற்கரையை அடையக்கூடும்.
இதன் தாக்கத்தால் நவம் 28 ஆம் தேதி முதல் மழை துவங்கி தமிழகத்தில் நவம் 29,30 தேதிகளில் வடக்குப் பருவமழை தீவிரமடையும்” என்று அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: இன்று உருவாகிறது சென்யார் புயல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.