இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் குறித்த தகவல் தகவல் தெரியவந்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வாய்க்கிழமை(நவ.25) காலை குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை, இந்திய பெருங்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை இன்று(நவ. 25) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
இந்த புயல் சின்னம் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்தப் புதிய புயலுக்கு தித்வா என்று பெயர் சூட்டப்படும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
தித்வா என்ற பெயரை ஏமன் நாடு பரிந்துரை செய்துள்ளது.
மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(நவ. 26) புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைந்த சென்யார் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.