இந்தியா அனைவருக்கும் சொந்தமானது, ஒரு குறிப்பிட்ட கலாசாரம், சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று இந்திய அரசியலமைப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சமூக வலைத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இந்தியா அனைவருக்கும் சொந்தமானது, ஒரு குறிப்பிட்ட கலாசாரம், சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல.
இந்த அரசியலமைப்பு நாளில், அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ்வொரு சக்தியையும் எதிர்ப்போம்.
நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்கவும், தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதே, நமது அரசியலமைப்பிற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.