டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை(நவ.29) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என்று அரசுத் தரப்பு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நேற்று(நவ. 27) புயலாக வலுப்பெற்றுள்ளது.
தற்போது வட தமிழகம் நோக்கி 4 கி.மீ. வேகத்தில் 'டிட்வா' புயல் நகர்ந்து வருகிறது.
வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைகளுக்கு இடையே நவ. 30 ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.