முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

மழை எச்சரிக்கை பற்றி..

Updated On : 29 நவம்பர் 2025, 4:37 pm IST
கோப்புப்படம் - ENS
பகிர்:

டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய 'டிட்வா' புயல் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Advertisement

Advertisement

மேலும் கோயம்புத்தூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சி, திருப்பூர், வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Ditwah cyclone: TN Rain update for next 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.