கோப்புப் படம் 
தமிழ்நாடு

டிட்வா புயல்: புதுச்சேரியில் இன்றும் விமான சேவை ரத்து

புதுச்சேரி - காரைக்கால் கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

டிட்வா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் இன்று விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் உருவான டிட்வா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.

சென்னையில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது. புதுச்சேரியில் இருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இதனால், புதுச்சேரி - காரைக்கால் கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, கொழும்பு - சென்னை இடையேயான 11 ஏர்லங்கா, 6 இன்டிகோ விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இலங்கை யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல்!

cyclone ditwah flights remain cancel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் பேருந்தில் அதிக கட்டணம்! தனி ஆளாக மறியலில் ஈடுபட்ட நபர்!

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

ஓர் ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

SCROLL FOR NEXT