முகப்பு
தமிழ்நாடு

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

Updated On : 30 நவம்பர், 2025 at 2:24 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,

  • சென்னை

  • செங்கல்பட்டு

  • காஞ்சிபுரம்

  • திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்றிரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைப்பொழிவு இருக்கக்கூடும்.

அதேபோல,

  1. கடலூர்

  2. மயிலாடுதுறை

  3. நாகப்பட்டினம்

  4. ராணிப்பேட்டை

  5. திருவண்ணாமலை

  6. வேலூர்

  7. விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்றிரவு 10 மணி வரை லேசான மழை பெய்யலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல் வலுவிழந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து மழைப்பொழிவு குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Heavy rain likely in 11 districts until 10 pm!

முழு கட்டுரையைப் படிக்க →