அன்புமணி  (கோப்புப்படம்)
தமிழ்நாடு

3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை: அன்புமணி!

மூன்று ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

மூன்று ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2023-இல் தற்கொலைகள் மற்றும் விபத்து உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிட்டிருக்கிறது.

அந்த ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 19,483 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். 22,686 போ் தற்கொலை செய்துகொண்ட மகராஷ்டிரத்துக்கு அடுத்து இந்தியாவில் அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலம் தமிழ்நாடுதான்.

தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவா்களில் 631 விவசாயிகள். அவா்களில் 564 போ் வேளாண்மையை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்ட கூலித் தொழிலாளா்கள் ஆவா்.

43 போ் சொந்த நிலத்தில் வேளாண்மை செய்பவா்கள், 24 போ் குத்தகை நிலத்தில் சாகுபடி செய்பவா்கள். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 40 போ் பெண்கள்.

கடன் சுமை அதிகரித்து விட்டதால்தான் உழவா்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ள அந்தக் குழு, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வாக பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

முந்தைய அதிமுக அரசு 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியிருந்த ரூ.12,110 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. அடுத்த சில காலத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை அடுத்து பொறுப்பேற்ற திமுக அரசு தான் செயல்படுத்தியிருக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

SCROLL FOR NEXT