நாமக்கல் மாவட்ட தவெக செயலாளர் சதீஷ்குமார் தலைமறைவானதால், அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல்லில் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக செயலாளர் சதீஷ்குமாரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தக்வல் வெளியாகியுள்ளது.
நாமக்கல்லில் செப். 27 ஆம் தேதியில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தின்போது, தனியார் மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தியதாக தவெகவின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதனையடுத்து, தன்னை காவல்துறையினர் கைது செய்யக் கூடும் என்று முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இருப்பினும், அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சதீஷ்குமார் தலைமறைவானதாகவும், அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: தவெக தலைவர் விஜய்க்கான பாதுகாப்பு உயர்த்தப்படுகிறதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.