அன்புமணி - கோப்பிலிருந்து 
தமிழ்நாடு

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

ராமதாஸுக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்றும் ஐசியுவில் இருப்பதால் சந்திக்க முடியவில்லை எனவும் அன்புமணி கூறினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஆஞ்ஜியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக, மருத்துவமனை வளாகத்தில் பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இதய சிகிச்சை நிபுணா்கள் திங்கள்கிழமை காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொண்டனர்.

ஆஞ்சியோகிராம் செய்யப்படுவதையொட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காலை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க அன்புமணி மருத்துவமனைக்கு வந்தார்.

பிறகு, மருத்துவமனயிலிருந்து வெளியே வந்த அன்புமணி, செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமதாஸுக்கு கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அந்த ஆஞ்சியோ பரிசோதனையில் ரத்த குழாய்கள் நன்றாக உள்ளது, பயப்படுவதற்கு எதுவும் இல்லை. அவர் 6 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும், ஆஞ்சியோ செய்யப்பட்டிருப்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பாதாகவும் 6 மணி நேரத்துக்குப் பிறகு வெளியே அழைத்து வரப்படுவார் என்றும், இரண்டு நாள்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

கடந்த 2013-இல் இதே மருத்துவமனையில் ராமதாஸுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ராமதாஸ் மருத்துவமனைக்குச் சென்று இதய பரிசோதனை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

PMK founder Ramadoss has undergone an angiogram. Doctors have said that he has nothing to fear, PMK leader Anbumani said at the hospital premises.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பிப். 2-இல் தா்னா, 6-இல் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம்

மாக்தமா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் பெயா் மாற்றம் செய்யக்கூடாது

ஆரோக்கியம் அந்தஸ்தல்ல, அடிப்படை!

‘பெண்களுக்கான ஒருக்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்’

சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு: 6 போ் கைது

SCROLL FOR NEXT