மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நலம்விசாரித்தார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான இதய பரிசோதனைகளுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார்.
மூத்த இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான குழுவினர் கண்காணிப்பில் ராமதாஸுக்கு பரிசோதனைகள் நடைபெறுவதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மருத்துவமனைக்கு நேரில் சென்று ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்துள்ளார்.
அவருடன் பாஜக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் ஜெய் பாண்டே, மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் உள்ளிட்டோரும் ராமதாஸை சந்தித்தனர்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை நண்பகல் மருத்துவமனைக்கு நேரில் சென்று ராமதாஸிடம் நலம்விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.