முகப்பு
தமிழ்நாடு

இரவில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Updated On : 8 அக்டோபர், 2025 at 3:08 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் இரவு 11 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, தேனி, நெல்லை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | உள்ளூர் செய்தியாளர்களிடம் சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை!

summary

Rain chance for 15 districts of tamilnadu

முழு கட்டுரையைப் படிக்க →