சென்னை எழும்பூர் - நெல்லை இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நிற்கும் நேரத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அண்மையில் அனுமதி அளித்தது.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் கடந்த 2024 செப்டம்பா் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக 16 பெட்டிகளாக இருந்த ‘வந்தே பாரத்’ ரயில் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ‘வந்தே பாரத்’ ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இதுவரை நிற்காமல் சென்று வந்தது. அங்கு நின்று செல்ல அனுமதிக்குமாறு அந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்துவந்தனர். அதற்கு, ரயில்வே வாரியம் அனுமதி தந்தது.
இந்த நிலையில், சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை அடிப்படையில் நாளை (அக்.9) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை - சென்னை வந்தே பாரத் (20666), கோவில்பட்டிக்கு காலை 6.38 மணிக்கு வந்து, 6.40 மணிக்கு புறப்படும் என்றும் சென்னை - நெல்லை வந்தே பாரத் (20665), கோவில்பட்டிக்கு இரவு 9,23 மணிக்கு வந்து. 9,25 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், 2 நிமிடம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 'ஒரு வழக்குரைஞருக்கே இந்த மனநிலை என்றால்...' - தலைமை நீதிபதி தாக்குதல் முயற்சிக்கு கார்கே கண்டனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.