கரூரில் செப். 27ஆம் தேதி நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் குறித்து தவெக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்துவது மட்டும் போதாது, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, அதனை ஏற்றுத்தான் பிரசாரம் செய்யப்பட்டது. வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத ஒருவரை நீதிமன்றம் நேரடியாக விமர்சிப்பது சரியல்ல, விஜய் மீது பல்வேறு கருத்துகளை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது என்று தவெத தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு கோரிய தவெக மனு தள்ளுபடி மற்றும், கூட்ட நெரிசல் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த செப்.27ஆம் தேதி, கரூரில், தவெக பிரசாரக் கூட்டத்தின்போது, எதிர்பாராதவிதமாக நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். 60 பர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு, விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மேலும், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தில் தற்போது தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியிருக்கிறது.
இதையும் படிக்க... குறுஞ்செய்தியை திருடும் செயலி! பதிவிறக்கம் செய்தால் எல்லாம் காலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.