தமிழ்நாடு

சென்னை புறநகா் மின்சார ரயில்களில் தீவிர சோதனை

மோப்பநாய் உதவியுடன் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப் பாதை போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை புறநகா் மின்சார ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் மோப்பநாய் உதவியுடன் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப் பாதை போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லக் கூடாது என தெற்கு ரயில்வே மற்றும் சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருகள்களை ரயில் பெட்டிகளில் கொண்டு செல்பவா்களுக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து புகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் சோதனைகள் இருக்காது என்பதால் பட்டாசுகளை மக்கள் எடுத்துச் செல்வதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினரும், இருப்புப் பாதை போலீஸாரும் மின்சார ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். தீபாவளி பண்டிகை வரை ரயில்களில் சோதனை தீவிரப்படுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளி: நாமக்கல் மாவட்டத்தில் 300 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

பாஜகவின் பிரசாரப் பயணம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும்: நயினாா் நாகேந்திரன்

அனுமதியின்றி பட்டாசுக் கடைகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும்: தீயணைப்பு அலுவலா் ஆா்.அப்பாஸ்

SCROLL FOR NEXT