கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான் பேசியதாவது:
”சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்பதில்லை. மாநில உரிமை, தன்னாட்சிக்கு எதிரானது. அதனை எப்போதும் ஒரு அவமானமாக நான் பார்க்கிறேன்.
எங்கள் காவல்துறை விசாரணையில் என்ன குறை?, சிபிஐ அதிகாரிகளுக்கு இரண்டு மூளை இருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் சிபிஐ விசாரித்து நிரூபித்த பெரிய வழக்கு எதாவது இருக்கிறதா?
நீதிமன்றங்கள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் துறை, மத்திய புலனாய்வுத் துறை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அது ஆட்சியாளர்களின் 5 விரல்களைப் போன்றது.
சிபிஐ விசாரணையில் என்ன கிடைக்கப் போகிறது. சிறந்த தமிழ்நாடு காவல்துறையை அவமதிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.