பொருளாதாரத்தில் எட்டிய இரட்டை இலக்க சாதனைப் பயணம், விளையாட்டுத் துறையிலும் எதிரொலிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 14) தெரிவித்தார்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 நிறைவு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,
''தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது.
இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு 16.28 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். தனிநபர் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ. 1 லட்சம், ரூ. 75,000 மற்றும் ரூ. 50,000 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
திறமையான வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க ரூ. 37 கோடி பரிசுத் தொகையோடு போட்டி நடத்தப்படுகிறது. தமிழக வீரர்கள் ஒவ்வொருவரும் சாம்பியன்ஸ் என வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
தேசிய, பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த 5,393 வீரர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் எட்டிய இரட்டை இலக்க சாதனைப் பயணம், விளையாட்டுத் துறையிலும் எதிரொலிக்கிறது.
234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும். முதல்கட்டமாக தலா ரூ. 3 கோடியில் 75 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது. வடசென்னையைச் சேர்ந்த கேரம் வீராங்கனை காசிமாவுக்கு ரூ. 1 கோடி பரிசளிக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம். எத்தனையோ ஏழை வீரர், வீராங்கனைகளின் கனவை விளையாட்டுத் துறை நனவாக்கி வருகிறது'' என முதல்வர் பேசினார்.
இதையும் படிக்க | கரூர் பலி! தவெக அடுத்தகட்ட நகர்வு என்ன? செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுகிறதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.