தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அக்டோபர் 19 ஆம் தேதி வரை பலத்த மழை தொடரும் என்று ஏற்கெனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை வானிலை மையம் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் அக்.18 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.