அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புப் பட்டை அணிந்து பேரவைக்கு வருகை 
தமிழ்நாடு

கையில் கருப்புப் பட்டையுடன் வந்த அதிமுக எம்எல்ஏ-க்கள்

அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புப் பட்டை அணிந்து பேரவைக்கு வந்திருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் துயர சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிரொலிக்கும் வகையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இடது கையில் கருப்புப் பட்டை அணிந்து பேரவைக்கு வந்தனர்.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அன்றைய தினம் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை தமிழக சட்டப்பேரவை கூடியவுடன் கேள்வி நேரம் நடைபெற்றது.

இந்த நிலையில், நாமக்கல் சிறுநீரக திருட்டு, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் இடது கையில் கருப்புப் பட்டையுடன் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமியுடனான கருத்து வேறுபாட்டால், அதிமுக கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்த்து வரும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் கருப்புப் பட்டை அணிந்திருந்தார்.

ரத்த அழுத்தமா? -பேரவைத் தலைவர்: கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுந்து வினா எழுப்பிக் கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு, "அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளீர்கள். எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ரத்த அழுத்தமா?' என கிண்டல் தொனியில் பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, "சிறைகளிலே சிறைவாசிகளுக்கு கையில் கட்ட அடையாளம் கொடுப்பார்கள். அதுபோல தனி அடையாளத்துடன் வந்துள்ளார்கள் என எண்ணுகிறேன்' எனக் கூறி, அவரும் கிண்டல் செய்தார். இதனால், அவையில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

AIADMK MLAs wear black armbands and participate the Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

SCROLL FOR NEXT