பேரவைத் தலைவரின் எதேச்சாதிகாரம்! தீபாவளி வாழ்த்து கோரிக்கையும் அவைக்குறிப்பில் நீக்கம்!
தீபாவளிக்கு வாழ்த்துகூற விடுத்த கோரிக்கையும் அவைக்குறிப்பில் நீக்கப்பட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தீபாவளித் திருநாளுக்கு வாழ்த்துகூற விடுத்த கோரிக்கையும் அவைக்குறிப்பில் நீக்கப்பட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களுடன் வானதி சீனிவாசன் பேசுகையில், ``தீபாவளித் திருநாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்குமாறு முதல்வரிடம் கேட்டேன். ஆனால், அதனை அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கி விட்டார்.
தீபாவளித் திருநாளுக்கு வாழ்த்துதான் சொல்லவில்லை. வாழ்த்துகள் சொல்லுங்கள் என்று சட்டப்பேரவை உறுப்பினர் கேட்டதைக்கூட, அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் அளவுக்குத்தான் திமுக அரசின் நிர்வாகம் இருக்கிறது; பேரவைத் தலைவரின் எதேச்சாதிகாரம் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கரூர் பலி! தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - தேர்தல் ஆணையம்!
BJP MLA Vanathi Srinivasan slams DMK Govt for Diwali wishes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.