அமைச்சா் துரைமுருகன் கோப்புப்படம்
தமிழ்நாடு

அக். 28ல் திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி: துரைமுருகன் அறிவிப்பு

திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி கூட்டம் அளிப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக நிர்வாகிகளுக்கு வருகிற அக். 28 ஆம் தேதி தேர்தல் பயிற்சி கூட்டம் நடக்கவிருப்பதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வருகிற அக். 28 செவ்வாய்கிழமை காலை 9 மணியளவில் மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் உள்ள 'கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திமுக தலைவர் திட்டமிடலின்படி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை கட்சி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டை வளைத்திட முயற்சிக்கும் வஞ்சக சூழ்ச்சி கொண்ட மத்திய பாஜக அரசின் முன்பு "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரையை திமுக தொடங்கவுள்ளது. அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர், திமுக தலைவர் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முன்னெடுப்புக்காக கழக மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் வரும் 28.10.2025 செவ்வாய்கிழமை காலை 9 மணி அளவில் மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DMK general secretary Duraimurugan has said that election training will be provided to DMK executives on oct. 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

SCROLL FOR NEXT