சென்னை மெட்ரோ 
தமிழ்நாடு

வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: சென்னை மெட்ரோ முதலிடம்!

வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

32 மெட்ரோ பங்கேற்ற ஆய்வில் 6,500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில் பற்று சென்னை மெட்ரோ முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”"COMET (Community of Metros)" என்பது உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ ரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை (benchmarks) நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் ஒரு புதிய உறுப்பினராகச் சேர்ந்தது.

உலகத் தரத்திலான செயல்பாடுகளை அடைவதற்கும், முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கும் இது முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆண்டுதோறும் முக்கியச் செயல்பாட்டுக் குறிகாட்டிகள் (Key Performance Indicators) குறித்த தரவுகளைச் சேகரிக்கின்றனர்.

இதன் மூலம் செயல்பாடுகள் அளவிடப்பட்டு, சர்வதேசத் தரநிலைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. இந்த ஒப்பீடு, உறுப்பினர்களாக உள்ள மெட்ரோ ரயில் நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், சிறந்த நடைமுறைகளை (best practices)அடையாளம் காணவும் உதவுகிறது. மேலும், முடிவெடுக்கும் செயல்பாட்டிற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.

COMET நிறுவனம் ஆகஸ்ட் 2025-இல், ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துப் பதிவு இணையதளம் மூலம் நடத்திய வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் (Customer Satisfaction Survey) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பங்கேற்றது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் இந்தக் கணக்கெடுப்பு பற்றிய விளம்பரம் சுவரொட்டிகள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு, சேவைத் தரம் (Service quality),அணுகல் (accessibility), கிடைக்கும்தன்மை (availability),நம்பகத்தன்மை (reliability), பாதுகாப்பு (security),பயன்படுத்துவதற்கான எளிமை (ease of use) மற்றும் சௌகரியம் (comfort) ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

உலகெங்கிலும் உள்ள 32 மெட்ரோ ரயில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அதிக எண்ணிக்கையிலான பங்கேற்புகள் மற்றும் சுமார் 6500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில்களைப் பெற்று, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகளுக்கான ஒட்டுமொத்த வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 5-க்கு 4.3 இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

● பெரும்பாலான சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் பணி நிமித்தமாக மெட்ரோவைப் பயன்படுத்துகின்றனர்.

● இந்த ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில் சுமார் 64% பேர் ஆண்கள், 33% பேர் பெண்கள் மற்றும் 3% பேர் மற்றவர்கள் ஆவர்.

● பதிலளித்தவர்களில் பெரும்பாலான பயணிகள் இளம் வயதினர் (30 வயதுக்குட்பட்டவர்கள்).

● பயணிகள், கட்டணம் செலுத்தும் முறைகள், கூடுதல் இட வசதி, மெட்ரோ நிலையங்களுக்கிடையேயான இணைப்பு வசதி (Interchange facility) மற்றும் நிலையங்களை எளிதாக அணுகும் வசதி (Station accessibility)ஆகியவற்றில் மேம்பாடுகளை எதிர்பார்க்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Metro has topped a customer survey of 32 metro companies around the world.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

176.5 கி.மீ./மணி வேகத்தில் வீசிய ஸ்டார்க்..! மிரண்டுபோன ரோஹித் சர்மா!

பிகார் தேர்தல்: 25 வேட்பாளர்களை களமிறக்கிய அசாதுதீன் ஓவைசி!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் இந்தியப் பிரபலம்!

ஆந்திரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

அன்பை விதைக்க... லஹோமா பட்டாச்சார்யா!

SCROLL FOR NEXT