முகப்பு
தமிழ்நாடு

இரவில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Updated On : 21 அக்டோபர், 2025 at 2:36 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை ) செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் அரியலூர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பருவமழை: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

summary

Rain chance for 25 districts of tamilnadu

முழு கட்டுரையைப் படிக்க →