முகப்பு
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு...

Updated On : 22 அக்டோபர், 2025 at 2:47 AM
செம்பரம்பாக்கம் ஏரி
பகிர்:

தமிழகம் முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், புயல் சின்னம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிமுதல் வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது.

தற்போது ஏரிக்கு வரும் நீரின் அளவு 2,170 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் 24 அடி நீர்மட்டத்தில் 20.84 அடி நிரம்பியுள்ளது.

மேலும், நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது.

summary

Increase in water flow to Chembarambakkam Lake

முழு கட்டுரையைப் படிக்க →