மகாராஷ்டிரத்தின் மும்பை ஜோகேஸ்வரி மேற்கு பகுதியில் உள்ள ஜேஎம்எஸ் வணிக வளாகத்தின் மேல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வணிக வளாகத்தில் மேல் தளத்தில் சிலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வந்ததையடுத்து, அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக மேல் தளத்தில் சிக்கியிருந்த 15 பேரை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.