அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 13 மாவட்டங்களுக்கு மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை.
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை(அக். 24) உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடு்ம்.
இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.