அடுத்த 2 மணிநேரம் சென்னை, 7 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்துக்கான வானிலை நிலவரம்...
தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரம் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, இந்த வாரத் தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை வெய்யில் அடித்த நிலையில், நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வருகின்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் இன்று காலை 10 மணிவரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rain in Chennai and 7 districts for the next 2 hours
இதையும் படிக்க : இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.