தமிழ்நாடு

தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு!

ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகா, அபினேஷ்க்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகா, அபினேஷ்க்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்னைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.

கார்த்திகாவும் அபினேஷும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.

நேற்று நான் #BisonKaalamaadan-இல் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோந்தா புயல்: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

CM Stalin felicitated Karthika and Abinesh, who won gold at the Asian Youth Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் மனிதாபிமானமற்ற முகம்: பெண் மருத்துவர் தற்கொலை விவகாரத்தில் ராகுல் கருத்து

உன்னைத் தழுவ அலைபாயும் காற்று... ஷ்ரத்தா தாஸ்!

சமூக நீதி பேசுபவர்கள் சமூக நல விடுதிகளை மூடுவது நியாயமா?: வானதி சீனிவாசன் கேள்வி

ஆண்டுதோறும் சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை!

‘மோந்தா’ புயல்: சென்னையில் கனமழை எப்போது தொடங்கும்? தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT