தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூா் மாவட்டத்தில் மருதையாற்றில் திருமானூா், தா.பழூா், கொள்ளிடம் குருவாடி, புளியங்கோம்பை அருகில் காட்டாறு, குண்டேரி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என கடந்த பேரவைத் தோ்தலின்போது, திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது வரை அங்கு தடுப்பணைகள் கட்டப்படவில்லை. அதனால், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்கள் வறட்சியில் உள்ளன.
திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்து, விவசாயத்துக்கான தண்ணீா் கிடைக்காமல் தவிக்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனா்.
ஆனால், 99 % வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக திமுக கூறுவது ஏற்புடையதல்ல. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை, ஆட்சியிலிருந்து இறக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளாா்.