சென்னையில் அடுத்த 2 வாரங்களுக்கு ஓரிரு இடங்களில் மழை விட்டு விட்டு பெய்யும் அல்லது மழைக்கான இடைவேளை கிடைக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் மழை நிலவரம் குறித்து தெரிவித்திருப்பதாவது:
”வடசென்னையில் மழை நீடிக்கும், தென்சென்னையில் 2 மணி நேரத்துக்குப் பிறகு மழை படிப்படியாக குறையும்.
வடசென்னையில் 60-70 மி.மீ மழை பதிவானது. கடலுக்கு மிக அருகில் உள்ள எண்ணூர், கத்திவாக்கம் பகுதியில் அதிக மழை பதிவானது.
தென்சென்னையில் 30-50 மி.மீ மழை பதிவானது. சென்னையில் அடுத்த 2 வாரங்களுக்கு மழை இருக்காது, ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் மோந்தா, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் இன்று(அக். 28) மாலைக்குள் மழை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவு! இன்றைய நிலவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.