அண்ணாமலை 
தமிழ்நாடு

பசும்பொன்னில் மூன்று பேரும் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமா? அண்ணாமலை

பசும்பொன்னில் மூன்று பேரும் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமில்லை என அண்ணாமலை பேச்சு

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், அதிமுகவில் சிலர் என்னைத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

ராமநாதபுரம் பசும்பொன்னில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இவர்கள் மூவரும் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமில்லை.

நான் வாய் திறந்தால் எல்லாவற்றையும் பேசி விடுவேன். வாக்கு கொடுத்துவிட்டேன் லட்சுமண ரேகையை தாண்ட மாட்டேன் என அமித் ஷாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன். ஆனால், என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று அண்ணாமலை கூறினார்.

சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, 'தமிழக அரசு உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஊழல்கள் செய்திருப்பதாகவும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது, மேலும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மீதும் ஊழல் புகார்கள் வந்துள்ளது, திமுக அரசின் இந்த ஊழல் புகார்களை மறைக்கும் விதமாக பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் தமிழர்கள் குறித்து பேசியதாக பொய்யான தகவல்களை முதல்வர் கூறி வருகிறார்.

கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் பிகார் மக்களை கொச்சையாக பேசியுள்ள விடியோ காட்சிகள் உள்ளன. திமுக கட்சியினர் தான் பிகார் மக்களை விமர்சித்து பேசியதாக பிரதமர் கூறினார்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திமுக எதிர்த்து வருகிறது. இது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான், திமுக பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளும் முறைகேடுகளும் செய்துள்ளது. அவை அனைத்தும் இந்த நடவடிக்கையின் மூலம் சீர் செய்யப்படும்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என யாரும் கூற முடியாது. யாருடைய வாக்குரிமையும் பறிக்கப்படவில்லை, அனைவரது வாக்குரிமையும் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது' என தெரிவித்தார்.

Annamalai talks about me not being the reason for the three people joining Pasumpon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT