மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா 
தமிழ்நாடு

ராஜராஜ சோழன் சதய விழா! 400 நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி!!

ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு 400 நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு 400 நாட்டிய கலைஞர்கள் பங்குபெற்று நடனமாடும் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி விழா நடைபெறவிருக்கிறது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040 வது சதய விழா இரண்டு நாள்கள் அரசு விழாவாக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று முதல் நாள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் மாமன்னர் ராஜ ராஜ சோழன் வேடமணிந்து மன்னர் வருவது போல சாரட்டு வண்டியில் அமர்ந்து மன்னர் வர, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய நகர்புற வீதி உலா தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து தஞ்சை பெரிய கோவில் வரை நடைபெற்றது.

பின்பு பெரிய கோவில் வந்த மன்னரை போற்றும் வகையிலும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் 400 நாட்டிய கலைஞர்கள் பங்கு பெற்ற புஷ்பாஞ்சலி நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவிகள் பங்கு பெற்று நாட்டியம் ஆடினர். ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT