தங்கம் விலை நிலவரம். 
தமிழ்நாடு

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

இன்றைய தங்கம் விலை நிலவரம் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.

கடந்த ஆக. 26-இல் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840-க்கும், ஆக. 27-இல் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.75,120-க்கும், ஆக. 28-இல் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.75,240-க்கும், ஆக. 29-இல் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.76,280-க்கும், ஆக. 30-இல் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கும் விற்பனையானது.

தொடர்ச்சியாக மாதத்தின் முதல் நாளான செப். 1-ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,705-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்த நிலையில், இன்று(செப். 2) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.9,725க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.

இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20,400 உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,600 உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெள்ளி விலையும் உயர்ந்து விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 137 -க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The price of gold jewellery in Chennai has increased by Rs. 160 per sovereign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் ஒருநாள்: தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு; 131 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து!

பிகார் தாய்மார்கள் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: பாஜக

மோடிக்கு டிரம்ப் நண்பரா எதிரியா? வரி விதிக்கச் சொன்னதே பிரதமர்தான்! ஆ. ராசா பேச்சு

கேரள நாட்டிளம்... நிகிலா விமல்!

ஆப்கன் நிலநடுக்கம்: 1,400-ஐ கடந்த உயிர் பலிகள்! | செய்திகள் சில வரிகளில் | 02.09.2025

SCROLL FOR NEXT