சி. விஜயபாஸ்கர் கோப்புப்படம்
தமிழ்நாடு

அதிமுக சி. விஜயபாஸ்கர் வீடு, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிமுக சி. விஜயபாஸ்கர் வீடு மற்றும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டிற்கும் தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் வீட்டிற்கு இன்று(புதன்கிழமை) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

அதேபோல இலுப்பூர் ராஜேஸ்வரி டவுன்ஷிப்பில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கும் மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதுகுறித்து இலுப்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள இலுப்பூர் தனியார் பள்ளிக்கு சோதனைக்காக வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள மெயிலில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பள்ளியிலும் அதன்பிறகு 20 நிமிடங்களில் திருச்சி நீதிமன்றம் மற்றும் சி. விஜயபாஸ்கரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

வெடிகுண்டு மிரட்டல் மெயில்...

Bomb threat to former AIADMK Minister C. Vijayabaskar house and private school in pudukottai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்...

சென்னை, புறநகரில் பரவலாக கனமழை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

வெள்ளி வெறும் ஆபரணமல்ல! விலை உயர்வின் பின்னணி!

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT