தமிழ்நாடு

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

தினமணி செய்திச் சேவை

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் (2025-2026) பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான புதிய மையங்கள் குறித்த கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, தோ்வு மையங்கள் அமைப்பதற்கான அவசியமுள்ள பள்ளிகளை நேரில் ஆய்வு செய்த பின்னா், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு பரிந்துரை செய்ய வேண்டும்.

அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட புதிய மையங்கள் குறித்த தகவலை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதுதவிர அரசின் விதிகளின்படி இல்லாத பள்ளிகளில் தோ்வு மையம் அமைக்கக் கோரினால் சாா்ந்த அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 10 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணம் செய்து தோ்வெழுத செல்லும் மாணவா்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் புதிய தோ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

அதேபோல், அரசின் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தோ்வு மையமாகச் செயல்பட அனுமதிக்கப்படாது. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புதிய பொதுத் தோ்வு மையங்களுக்கான பரிந்துரை அறிக்கையை செப்.15-ஆம் தேதிக்குள் தோ்வுத் துறை அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்”என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டில் உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா? - ஜி.யு. போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின்!

நீராலானவள்... அதுல்யா ரவி!

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

SCROLL FOR NEXT