வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாகவே தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்துள்ளது. தெரு நாய்கள் சாலைகளில் செல்பவர்களை துரத்தி கடிக்கும் பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும், வளர்ப்பு நாய்களாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவது பல்வேறு கவலைகளை ஏற்படுத்திள்ளது.
நாய்கள் கடித்து உயிரிழப்பது ஒருபுறம் இருந்தாலும், நாய்கள் குறுக்கே பாய்ந்து இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் விபத்துகளால் ஆட்டோக்களில் செல்வோர் பலியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வீடுகளில் நாய்கள் வளர்ப்போர் தங்களது நாய்களுக்கு உடல்நலக்குறைவு, நோய் பாதிப்பு அல்லது நாயை பராமரிக்க முடியாவிட்டால் சாலையில் விட்டுச் சென்றூ விடுகின்றனர். இதனால், தெரு நாய்கள், வீட்டில் வளர்க்கும் நாய்கள் என நாய்யின் பெயரை கேட்டாலே பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதனை உடனடியாகத் தடுக்க சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்த சென்னை பெருநகர மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம்(அக்டோபர்) முதல் அமலுக்கு வருகிறது.
மைக்ரோ சிப் பொருத்தாத வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3000 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,000 பேர் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளர்ப்போர் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவதற்கு சென்னை மாநகராட்சியில் ஜனவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவதற்கு மைக்ரோ சிப்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், மைக்ரோ சிப் பொருத்துவது குறித்து தனியார் மற்றும் அரசு கால்நடை சுகாதார மையங்களில் விரைவில் வழிமுறைகள் வெளியிடப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்துச் செல்லும்போது வாய்மூடி கட்டாயம் அணிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.