கோப்புப் படம் 
தமிழ்நாடு

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

விழுப்புரம்: பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் பகுதியளவில் ரத்து, புறப்படும் நேரம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம் போன்ற நடைமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் -விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), செப்டம்பர் 13,20,27 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), செப்டம்பர் 13,20,27 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019), செப்டம்பர் 13,20,27 ஆகிய தேதிகளில் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும்.

குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண் 16127), செப்டம்பர் 16,23,30 ஆகிய தேதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்து, பின்னர் இயக்கப்படும்.

இதுபோன்று எழும்பூரிலிருந்து காலை 10.20 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண் 16128), செப்டம்பர் 11-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 45 நிமிடங்களும், 15-ஆம் தேதி சுமார் 30 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

It has been announced that Villupuram trains have been partially cancelled due to engineering works.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரசாரத்தின் போது அவசர ஊா்தியை சேதப்படுத்திய வழக்கு: அதிமுவினா் 4 பேருக்கு முன்பிணை

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் உணவகம் கட்டுவதற்குத் தடை கோரிய வழக்கு

சுற்றுலாத்தொழில் முனைவோா் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT